திருநீற்றுப்பச்சிலை வளர்ப்பு, சப்ஜா விதைகளை பிரித்தெடுக்க எளிதான வழி மற்றும் அதன் பயன்பாடு
Scientific name : Ocimum basilicum
Common name: French Basil or Sweet Basil or Thiruneetrupachilai
Sweet Basil is popularly known for its aromatic leaves and Sabja or Falooda seeds. Popular herb and easy to maintain in warm weather condition. It can be easily grow in ground or grow bags or even in waste small boxes. Just sprinkle the seeds on the soil or potting mix. It will start sprouting within 5-7 days and grow automatically with less care. We will get the Sabja seeds from the plant within 2 months and will get seeds continuously. Actually, Sweet Basil is perennial plant in tropical regions and as annual plant in temperate regions.
திருநீற்றுப்பச்சிலை / இனிப்பு துளசி அதன் நறுமண இலைகள் மற்றும் சப்ஜா அல்லது ஃபலூடா விதைகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறது. பிரபலமான மூலிகை மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் பராமரிக்க எளிதானது. இது தரையில் அல்லது வளர்ப்பு பைகள் அல்லது சிறிய டப்பாக்களில் கூட எளிதாக வளர்க்கலாம். விதைகளை மண்ணில் அல்லது மண் கலவையில் தெளித்து விட்டாலே போதும். இது 5-7 நாட்களுக்குள் முளைக்க ஆரம்பித்து, குறைந்த கவனிப்புடன் தானாகவே வளரும். 2 மாதங்களுக்குள் சப்ஜா விதைகளை செடியிலிருந்து பெறலாம். தொடர்ந்து விதைகள் கிடைக்கும். திருநீற்றுப்பச்சிலை வெப்பமண்டல பகுதிகளில் பல்லாண்டு தாவரமாகவும், குளிர் பிரதேசங்களில் வருடாந்திர தாவரமாகவும் உள்ளது.
Easy to chew leaves directly. The leaves of plant contain methylchaylcol, linalol, eugenol, thymol and xanthamicrol. It has good medicinal value.
இலைகளை அப்படியே சாப்பிடலாம். இலைகளில் மீதில்சைல்கோல், லினாலோல், யூஜெனால், தைமால் மற்றும் சாந்தாமிக்ரோல் ஆகியவை உள்ளன. இது நல்ல மருத்துவ குணம் கொண்டது.
Easy way to extract Sabja seeds
- Small white flowers grow in spikes at the ends of the stems and it will convert as seeds
- Collect the dried matured seed stalks
- Sun dry it for a day
- Take out the seeds with the help of hand
- One or two round of smooth grinding the tiny seed pods with the help of Mixer grinder
- Sieve with large mesh
- Seed pods and other debris will stay on the mesh.
- Tiny black seeds and small dust would be collected in a bowl.
- Winnowing and blowing air will segregate the small seeds
- Collect the clean seeds and store it in container
சப்ஜா விதைகளை பிரித்தெடுக்க எளிதான வழி
சிறிய வெள்ளைப் பூக்கள் தண்டுகளின் முனைகளில் வளர்ந்து விதைகளாக மாறும் காய்ந்த முதிர்ந்த விதை தண்டுகளை சேகரிக்கவும் ஒரு நாள் வெயிலில் காய வைக்கவும் கையால் விதைகளை உருவி எடுக்கவும் மிக்ஸி கிரைண்டரின் உதவியுடன் சிறிய விதை காய்களை ஒன்று அல்லது இரண்டு சுற்று மென்மையாக அரைக்கவும் பெரிய கண்ணி கொண்டு சல்லடையில் சலிக்கவும் மேலோடு மற்றும் மற்ற குப்பைகள் சல்லடையின் மேல் பக்கத்தில் இருக்கும் சிறிய கருப்பு விதைகள் மற்றும் சிறிய தூசி ஒரு கிண்ணத்தில் சல்லடையின் கீழ் சேகரிக்கப்படும். தூற்றுதல் அல்லது ஊதுவதன் மூலம் சிறிய துகள்கள் அகற்றப்படும் சுத்தமான விதைகளை சேகரித்து கொள்கலனில் சேமிக்கவும்
How to use Sabja seeds?
- Take the sweet basil seeds in a bowl.
- Remove the chaff or husks or stones if there are any from them.
- Pour enough water.
- They will soon begin absorbing water.
- Soak them for 30 mins.
- Once they absorb the water, a translucent gelatin like coating is formed around them.
- Strain and then Use these soaked seeds in drinks, coolers, sherbets, ice creams, falooda or kulfis.
சப்ஜா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
இனிப்பு துளசி விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உமி அல்லது கற்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்கி விடவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றவும். விதைகள் விரைவில் தண்ணீரை உறிஞ்சத் தொடங்கும். அவற்றை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அவை தண்ணீரை உறிஞ்சியவுடன், அவற்றைச் சுற்றி பூச்சு போன்ற ஒரு ஒளிஊடுருவக்கூடிய ஜெலட்டின் உருவாகிறது. இந்த ஊறவைத்த விதைகளை வடிகட்டி, பானங்கள், குளிர்விப்பான்கள், சர்பத், ஐஸ்கிரீம்கள், ஃபலூடா அல்லது குல்ஃபிகளில் பயன்படுத்தவும்.
Health Benefits of Sabja seeds
- Natural Body Coolant
- Useful in Weight Reduction
- Rich in Anti-Inflammatory & Anti-Carcinogenic Properties
- Minimize Stress & Anxiety
- Good for sore throats, cold and respiratory disorders.
- Supports in digestion
- Cure constipation.
- Calming effect and can uplift your mood.
சப்ஜா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
இயற்கை உடல் குளிரூட்டி எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் அழற்சி எதிர்ப்பு & புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் நிறைந்தது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் தொண்டை புண், சளி மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு நல்லது. செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. அமைதியான மனநிலையை மேம்படுத்த முடியும்.
Note: Avoid excess consumption. Better to avoid the intake by Pregnant women, feeding mothers and infants because of its slight narcotic effects.
குறிப்பு: அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அதன் சிறிய மயக்க மூட்டும் விளைவுகளால்.
