நாட்டு ரக விதைகள், வீரிய ஒட்டு விதைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு
| S.No. வ. எண் | Particulars விவரங்கள் | Desi seeds நாட்டு ரக விதைகள் | Hybrid வீரிய ஒட்டு ரக விதைகள் | Genetically modified seeds மரபணு மாற்றப்பட்ட விதை |
| 1. | தோற்றம் Origin | குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம் Native of particular locality | குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம் அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது Native of particular locality or adopted from some other place | வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது Adopted from some other place |
| 2. | உருவாக்கம் Creation | தலைமுறை தலைமுறையாக விதைகள் சேமிக்கப்பட்டு அடுத்த பருவத்திற்கு விதைக்கப்படுகின்றன Generation by generation seeds saved and propagated | ஒரு புதிய குணாதிசயத்தைப் பெற, இரண்டு வெவ்வேறு குணாதிசயமுள்ள தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன To get a new character, two different characteristic plants cross pollinated | ஒரு புதிய குணாதிசயத்தைப் பெற, தாவரங்களின் மரபணுக்கள் மற்ற உயிரினங்களின் மரபணுக்களுடன் ஆய்வக நிலையில் மாற்றப்படுகின்றன. To get a new character, plant genes inserted with other organism genes at laboratory condition |
| 3. | மரபணு Genome | தாவர மரபணு Plant gene | தாவர மரபணு Plant gene | தாவரம் + பிற உயிரின மரபணு Plant + Other organism gene |
| 4. | பராமரிப்பு Maintenance | பராமரிக்க எளிதானது Easy to maintain | கூடுதல் கவனிப்பு தேவை Need extra care | கூடுதல் கவனிப்பு தேவை Need extra care |
| 5. | சாகுபடி செலவு Cost of cultivation | குறைவு Low | அதிகம் Huge | அதிகம் Huge |
| 6. | சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு Taste and nutritive value | அதிகம் Huge | குறைவு Low | குறைவு Low |
| 7. | விதை பயன்பாடு Seed usage | சேமித்து வைத்து அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தலாம் Can be stored and used for next generation | அடுத்த தலைமுறைக்கு சேமித்து பயன்படுத்த முடியாது, அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தினால், முன்பு கிடைத்த விளைச்சலைப் பெற முடியாது. Cannot be stored and used for next generation, if used for next generation, we can’t get same yield as we got earlier | அடுத்த தலைமுறைக்கு சேமித்து பயன்படுத்த முடியாது, அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தினால், முன்பு கிடைத்த விளைச்சலைப் பெற முடியாது. Cannot be stored and used for next generation, if used for next generation, we can’t get same yield as we got earlier |
| 8. | உதாரணம் Example | சேலம் முள் கத்தரி Salem Thorny Brinjal | நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கலப்பின விதைகளும் All hybrid seeds produced by institutions | Bt Cotton Bt Brinjal பேசில்லஸ் துரின்சியன்சிஸ் எனும் நுண்ணுயிர் பருத்தி, கத்தரி தாக்கும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த நுண்ணுயிர் மரபணு பருத்தி, கத்தரி செடிகளின் மரபணுவுடன் இணைக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்ட புதிய செடி உருவாக்கப்படுகிறது. Genes of Bacillus thuringiensis (or Bt) inserted with the genome of Cotton / Brinjal to get borer resistant plants. |
| 9. | உடல் நலம் Health benefits | ஆரோக்கியமானது Healthy | ஆரோக்கியம் குறைவு Less Healthy | ஆரோக்கியமற்றது Unhealthy |
| 10. | இயற்கை விவசாயத்திற்கு ஏற்றது Suitability for organic gardening | சிறப்பு Excellent | குறைவாக Less | பூஜ்யம் Nil |
| 11. | பூச்சி மற்றும் நோய் தொற்று Infection of pest and diseases | குறைவு Low | அதிகம் Huge குறிப்பிட்ட பூச்சி அல்லது நோய்களுக்கு எதிர்ப்பு Resistant to particular pest or diseases | அதிகம் Huge குறிப்பிட்ட பூச்சி அல்லது நோய்களுக்கு எதிர்ப்பு Resistant to particular pest or diseases |
| 12. | சுற்றுச்சூழல் பாதுகாப்பு Environment safety | ஆம் Yes | குறைவு Low | No இல்லை |
Happy Greening… P.Dheivanai, M.Sc. (Ag.), 9382132593

